நல்லாட்சி அரசாங்கத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுக இடையே மீண்டும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தப்படும் என தகவல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகள் தங்களையும் குறித்த ஒப்பந்ததில் இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரியுள்ளதாக ஊடக தகவல் வெளியியாகியுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டனி கட்சியான மு கா மற்றும் மக்கள் காங்கிரஸ் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எஞ்சியுள்ள 18 மாத காலம் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.