• Mon. Oct 13th, 2025

“அரசினை கவிழ்ப்பதற்று யாரையும் தான் விடப்போவதில்லை”  –  சஜித்

Byadmin

May 2, 2018

(“அரசினை கவிழ்ப்பதற்று யாரையும் தான் விடப்போவதில்லை”  –  சஜித்)

காலம் சென்ற ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவின்25வது மறைவு தினம் மே 1ஆம் திகதி கொழும்பு புதுக்கடையில்
அமைச்சா் சஜித் பிரேமதாச தலைமையில்  நடைபெற்றது.  இந் நிகழ்வில் ஜனாதிபதி மைததிரிபால சிறிசேனா, பிரதமந்திரி ரணில் விக்கிரமசிங்க, எதிா்கட்சித் தலைவா்இரா சம்பந்தன் சபாநாயகா் கருஜயசூரிய கொழும்பு மேயா் ரோசி சேனாநாயக்க உட்பட அமைச்சா்கள்  பா.உறுப்பிணா்கள்  மற்றும் ஜயாயிரத்திற்கும் மேற்பட்ட  பொது மக்கள் இந் நிகழ்வில்  கலந்து கொ்ண்டனா். அத்துடன் புதுக்கடையில்  உள்ள மறைந்த ஜனாதிபதி ஆர் பிரேமதாசாவின் உருவச் சிலைக்கு அதிதிகளினால் மலா் மாலை அணிவிக்கப்பட்டது.

அத்துடன்  5000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடமைப்புக் கடன்கள்,  வீட்டுரிமைப் பத்திரம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் அரசியல்பழிவாங்கப்பட்டவா்களுக்கு  பதவிஉயா்வு சம்பள அதிகரிப்பு வழங்குதல்  மற்றும் பொது நல வாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்குச்  சென்று 3வது இடங்களைப் பெற்ற 6 வீரா்களுக்கு முறையே   35இலட்சம் பெறுமதியான 6  வீடுகளுக்கான   பத்திரங்கள் திறப்புகள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உரையாற்றி அமைச்சா் சஜித் பிரேமதாச –

காலம் சென்ற ஆர் பிரேமதாசாவின்  செயற்பாடுகளை தான் தொடா்ந்தும்  முன்னெடுப்பதாகவும் அவரது அடிச்சுவட்டையே பின்தொடா்வதாகவும் தெரிவித்தாா்.  ஏழை எழிய மக்களின் தோழன் அவா்.  அவா்  365 நாட்களும் நழிவுற்ற மக்களுடனே வாழ்ந்து தண்னை அர்ப்பணித்தாா்.  . அத்துடன்  இந்த அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு  ஒரு போதும் விடப்போவதில்லை  ஜனாதிபதி பிரதமருடன் கைகோா்த்து அவா்களது ஆட்சியில் அவா்களது ஆசிா்வாதத்துடன் தான்  தொடா்ந்தும்   சிறந்த சேவையை மக்களுக்கு ஆற்றிவருவதாகக் கூறினாா்.

இந்த அரசினை கவிழ்ப்பதற்று யாரையும் தான் விடப்போவதில்லை எனவும் அமைச்சா் சஜித் அங்கு கூறினாா்.   வீடமைப்புத் திட்டத்தில்  2025 ஆண்டு வரை வீடடற்ற  மக்களுக்கு வீடுகளை முன்னெடுப்பதற்கு 2000 உதா கம்மான மாதிரிக் கிராமங்களை தான் நாடுமுழுவதிலும் நிர்மாணித்து வருவதாகக் கூறினாா்.  தனது மக்களுக்கு  ஏதும் செய்ய முடியுமென்றால் அதனை செய்வதாகவும் தான் ஒரு போதும் பதவிகள் பட்டங்களை தேடி அலையவில்லை. அவைகள் இல்லாமலே மக்களுக்கு உதவ முடியும்  எனவும் கூறினாா். தனது தந்தை காட்டிய வழிகளில்  தன்மை அர்ப்பணித்துள்ளதாகச் கூறினாா். தனக்கு தரப்பட்ட அமைச்சின் ஊடாக  மக்களுக்கு என்ன அபிவிருத்திகளைச்  செய்ய முடியுமே அதனை தான் திறம்படச் செய்து வருவதாகச் கூறினாா்.

தனது தந்தையின் கம்உதாவ , 200 ஆடைத் தொழிற்சாலைகள், சனசக்தி, கிராமதோயம் போன்ற திட்டங்கள் கிராம மக்களுக்கு உதவ வழிவகுத்தாகவும்   அமைச்சா் சஜித் அங்கு உரையாற்றினாா்.

இதன் அடிப்படையில் இந்த நாட்டில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் கிராமங்களில் வாழும் இளைஞா் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முறையானதொரு திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதியையும் பிரதமறையும் அமைச்சா் சஜித்  வேண்டிக் கொண்டாா்.

-அஷ்ரப் ஏ சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *