• Mon. Oct 13th, 2025

அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம் படைத்துள்ள சாதனை

Byadmin

May 2, 2018

(அட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம் படைத்துள்ள சாதனை)

ட்டாளைச்சேனை அறபா வித்தியாயலம், இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

அறபா வித்தியாலயத்தில் சாதாரண பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 96.3 வீதான மாணவர்கள் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய கோட்டங்களில் க.பொ.த. சாதரணதர வகுப்புக்களைக் கொண்ட 22 பாடசாலைகள் உள்ளன.

இந்தப் பாடசாலைகளிலிருந்து 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த. சாதரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில், அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயம் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.

அறபா வித்தியாலயத்தின் அதிபராக எம்.ஏ. அன்சார் பொறுப்பேற்றுக் கொண்டமையினை அடுத்து, அந்தப் பாடசாலையானது அனைத்து துறைகளிலும் சடுதியான வளர்ச்சி பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதன் ஒரு அம்சமாகவே, இம்முறை வெளியான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அறபா வித்தியாலயம், வலய மட்டத்தில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக மாறியுள்ளது.

க.பொ.த. சாதாரணதரத்தில் அதிக வீதமான மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலைகளில் இரண்டாவதாக அக்கரைப்பற்று அல் முனவ்வரா கனிஷ்ட வித்தியாலயமும், மூன்றாவதாக  அக்கரைப்பற்று ஆயிஷா வித்தியாலயமும் இடம்பிடித்துள்ளன.

-TM.Imthiyas-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *