(இயர் அட்டாக் என்றால் என்ன..? இதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க…!)
ஹார்ட் அட்டாக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன இயர் அட்டாக்? இதையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க.
உடலில் உள்ள ஒவ்வொரு அங்கங்களும் மிகவும் முக்கியம். ஏனெனில் ஒவ்வொரு உடல் பாகங்களும் அதனுடைய பணியை அமைதியாக செய்து வருகின்றன. இதில் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.
முக்கியமாக உலகில் உள்ள சப்தங்களை காது மூலமாகவே கேட்கிறோம். அதனால் காதுகளை முறையாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் செவித்திறன் குறைபாடு ஏற்படும். ஒரு சில நேரத்தில் இயர் அட்டாக் கூட வரும்.
ஹார்ட் அட்டாக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன இயர் அட்டாக்? நாம் ஓரளவு பாலன்ஸ்ட் ஆக நடமாடுகிறோம் என்றால் காது என்ற அற்புத உறுப்பில் உள்ள திரவத்தால் தான். ஸடன் நியூரல் ஹியரிங் லாஸ் சுருக்கமாக எஸ்.என்.ஹெச்.எல் (Sudden Neural Hearing Loss) என்பதைத்தான் இயர் அட்டாக் என மருத்துவப் பெயரில் கூறப்படுகிறது. இது நடந்தால் திடீரென்று காது கேட்காமல் போய்விடும்.
இயர் அட்டாக் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், மூச்சுப் பாதையில் இன்ஃபெக்ஷன் இவற்றுள் எது ஏற்பட்டாலும் திடீரென்று காது கேட்காமல் போய்விடும். சரியான சிகிச்சை கொடுத்தால் இரண்டு வாரங்களில் குணமாக்கி விடலாம்.
காதில் வெளிகாது, நடுக்காது, உள் காது என்று மூன்று அமைப்புகள் உள்ளன. அதில் உள் காது பாதிக்கப்பட்டால்தான் இத்தகைய பாதிப்பு திடீரென்று வருகிறது. அதனால் முறையாக காதினை பராமரித்து இயர் அட்டாக் வராமல் பார்த்து கொள்வது சால சிறந்தது.