(கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் நாளை(03)…)
சபாநாயகர் கருஜயசூரியவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம் ஒன்று நாளை(03) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறியுள்ளார்.
குறித்த கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று(02) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதனை நாளை(03) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றின் பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல கூறினார்.
புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் நாளை(03) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.