(நாட்டின் பல மாகாணங்களில் கடும் வெப்பம்)
நாட்டின் பல மாகாணங்களில் இன்றைய தினம்(03) அதிக வெப்ப காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வட மேல், ஊவா மாகாணங்களிலும், மாத்தளை அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடும் வெப்ப காலநிலை காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கூடுதலான கவனம் செலுத்துமாறு திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.