• Sun. Oct 12th, 2025

வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

Byadmin

Jun 13, 2017
கல்குடாத் தொகுதியின், வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு ஹைராத் வீதியில் அமைந்துள்ள கழக காரியாலயத்தில் அதன் உபதலைவர் யூ.எல்.எம். காலிதீன் (நஹ்ஜி) அவர்களின் தலைமையில் 2017.06.11-ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.
ஏறாவூர் நூறுல் சலாம் மஸ்ஜிதின் பேஸ் இமாம் அஷ்ஷெய்க். எம்.ஐ. றியாஸ் (பயாலி) அவர்களின் விஷேட பயான் நிகழ்ச்சியுடன் பி.ப. 05.30 மணிக்கு ஆரம்பமானதுடன் மஃரிப் தொழுகைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
இவ்இப்பதார் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். எச்.எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ரீ.எம். றிஸ்வி (மஜீதி), கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ. றியாஸ், வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் தலைவர் எம். கலந்தர் லெப்பை மற்றும் பிரதேசத்திலுள்ள புத்திஜீவிகள், பிரமுகர்கள் மற்றும் இளைஞர்கள் என பெரும்திரலானவர்கள் இப்இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வாழைச்சேனைப் பிரதேசத்தில் விளையாட்டு, கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களில் பாரிய தாக்கத்தினைச் செலுத்தி வரும் அல்-ஹக் விளையாட்டுக் கழகமானது வாழைச்சேனையில் அரசியலைத் தீர்மானிக்கின்ற ஒரு சக்தியாகவும் இருந்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-எம்.ரீ. ஹைதர் அலி –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *