(இராஜாங்க அமைச்சரானார் ஏ.எச்.எம்.பௌசி)
தேசிய சகவாழ்வு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
அதேவேளை ஆரிய பண்டார அவர்கள் ஊவா மாகாண ஆளுநராக பதவியேற்றுக் கொண்டுள்ளார்.