(பேரூந்து கட்டணங்களை அதிகரிக்கும் தீர்மானம் இன்று)
எரிபொருள் விலை அதிகரிப்பில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பேரூந்து கட்டணங்களை அதிகரிக்க நேரிட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள சதவீதத்திற்கு அமைய பேரூந்து கட்டணம் அதிகரிப்பது குறித்து, இன்று(11) இடம்பெறவுள்ள பணிப்பாளர் சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.