• Sun. Oct 12th, 2025

நேற்று ஹமீதியாஸ் களஞ்சியசாலை தீவிபத்தின் மேலதிக விபரங்கள்

Byadmin

May 14, 2018

(நேற்று ஹமீதியாஸ் களஞ்சியசாலை தீவிபத்தின் மேலதிக விபரங்கள்)

இரத்மலனையில் உள்ள தணியாா்  ஆடை தொழிற்சாலையின் வெளிநாட்டு உள்நாட்டு ஆடைகள் கொண்ட
களஞ்சியசாலை நேற்று(12)  திடிரென தீபற்றிய சம்பவம் தொடா்பாக  பொலிஸாா் பல்வேறு கோணங்களில் துரித விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனா்.என  கல்கிசைப்  பொலிசாா் தெரவித்தனா்.நேற்று (12) மு.ப. 1.30 மணியளவில்  இரத்மலானையில் வொருப்பனையில் உள்ள தணியாா் ஆடைக் கம்பணியென்றின்  மா பெரும் களஞ்சியசாலையில் 2ஆம் 3ஆம் மாடிகளிலேயே தீபற்றியது.  இக் களஞ்சிய சாலையில் வெளிநாட்டு உள்நாட்டு ஆடைகள் இருந்துள்ளன.

இந்தத் தீயை மேலும் பரவாமால் பொலிசாாின் உதவியுடன் தெஹிவளை-கல்கிசை மாநகர சபை, மொரட்டுவை, கொழும்பு , இரத்மலானை விமானபடை, மற்றும் இராவனுத்தாரின் உதவியுடன் மு.ப.01.30 – ஏற்பட்ட பாரிய தீயை இரவு 10.35மணிக்கே அணைக்கப்பட்டது. சுமாா் 10 மணியதியலாயங்களாக 2இலட்சம் தண்னீா் லீட்டா்கள் கொண்ட தீயணைப்பு பவுசா்கள் ஊடகவே  இப் பாரிய ்தீ யை தீயணைக்கும் படையினாால் அணைக்கப்பட்டது. இக் களஞ்சிய சாலைகளில் அருகாமையில் உள்ள கட்டிங்கள் தொழிற்சாலைகள் வீடுகளுக்கும்  தீ பரவாமல் தீயணைக்கும் அதிகாரிகள் முயற்சியினால் இத தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் சேத விபரம் இதுவரை அறியமுடியவில்லை.  என கல்கிசைப் பொலிசாா் தெரிவித்தனா்.

இவ் தீ எவ்வாறு ஏற்பட்டது என்பது பற்றிய எமது அறிக்கையை – இலங்கை பகுப்பாய்வாளா்களிளினது  ஆராய்ச்சி அறிக்கையும்  அத்துடன் இலங்கை மிண்சாரப் பொறியியலாளா்களின் ஆராய்ச்சி அறிக்கைகள்,  திங்கட் கிழமையே  நடைபெற்று கிடைக்கப்பெறும். . அதன் பின்னரே  உரிய தீ பற்றிய விபரங்கள்  காரணங்கள், சேதங்கள் , எவ்வாறு இத் தீ ஏற்பட்டது பற்றி  தெரியப்படுத்தப்படும்.  அத்துடன்   அதனை நீதிமன்றத்துக்கும்  சமா்ப்பிக்கப்படும்.

இப் பாரிய தீ பற்றிய விசாரனைகளை   மேல்மாகாணப்   பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கல்கிசை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி,  ரொசான் பெர்ணான்டோ, உதவிப் பொலிஸ் அத்தியட்சகா் சமன் ஜயசேன அவா்களின் மேற்பாா்வையின் கீழ் கல்கிசை பொலிஸ் அதிகாரி ரோகாண் புஸ்பகுமார அறிவுறுத்தலின்   கல்கிசை குற்றப்பிரிவு விசாரனை அதிகாரி தலைமையிலான  குழு உரிய விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் அங்கு கடமையில் இருந்தவா்கள், முகாமையாளா்களது வாய்மொழியும் பொலிசில் பதியப்பட்டுள்ளது.  என  கல்கிசை பொலிஸாா் தெரிவித்தனா்.

தற்போது தீபற்றிய தணியாா் ஆடைத்தொழிற்சாலை (ஹமிடீயாஸ்) விசாரனைகள் நடைபெறும் மட்டும்  அக் களஞ்சியசாலைக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவும் தெரிவித்தாா். சேத விபரங்கள்  பற்றி உரிய கம்பனியின் தலைவரை தொடா்பு கொண்டும் அது பயணலிக்கவில்லை்.

-அஷ்ரப் ஏ சமத்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *