• Wed. Oct 15th, 2025

கோடை காலத்தில் குளு குளுவென இருக்க வேண்டுமா..?

Byadmin

May 11, 2018

(கோடை காலத்தில் குளு குளுவென இருக்க வேண்டுமா..? )

மாதுளம்பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன் முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்து விட்டு விதைகளை உமிழ்ந்து விடுவார்கள். ஆனால் மாதுளம்பழத்தின் சத்தே அதன் விதைகளில் தான் அதிகம் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். பொதுவாக அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் பூத்துக் காய்த்து பழமாகும் மாதுளம் பழத்தின் சத்துக்களையும், மருத்துவச் சிறப்புகளையும் இப்போது பார்ப்போம்.

மாதுளம்பழத்தில் அதிக பட்சமாக நீர்சத்து 78 விழுக்காடு உள்ளது. புரதச்சத்து 1.6 விழுக்காடும், நார்ச்சத்து 5 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 14.5 விழுக்காடும், தாதுக்கள் 0.7 விழுக்காடும், சுண்ணாம்புச்சத்து 10 விழுக்காடும், மக்னீஷியம் 12 விழுக்காடும் அடங்கியுள்ளன. இது தவிர, சிலிக்திராவகம் 14 மில்லி கிராம், கந்தகம் 12 விழுக்காடு, குளோரின் 20 விழுக்காடு, தயாமின் 0.46 விழுக்காடு, பாஸ்பரம் 1.33 விழுக்காடு, செம்பு 0.2 விழுக்காடு, நிக்கோடினிக் அமிலம் 0.30 விழுக்காடும் உள்ளன. மேலும், வைட்டமின் சி சத்து 16 மில்லி கிராம் அளவிற்கு மாதுளத்தில் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதுளம் பழத்தைப் பொருத்தவரை பூ, தோல், விதை என அனைத்து மே மருத்துவச் சிறப்பு வாய்ந்தவை. மாதுளம் பூ, இரத்த வாந்தி, இரத்த மூலம், வயிற்றுக் கடுப்பு, சூடு முதலியவற்றை போக்கும். பூவை கஷாயமாக செய்து குடித்தால் தொண்டை தொடர்பான பலபிணிகளும் அகலும். மாதுளம் பழரசம் தாதுவைப் பெருக்கும், வாந்தியை நிறுத்தும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்க் குறைபாடுகளை அகற்றும்.

இது தவிர, காதடைப்பு, வெப்பக்காய்ச்சல், மந்தம், மயக்கம் ஆகியவற்றையும் பழரசம் விலக்கும். மாதுளம் பழரசத்துடன் ஒன்றரைப் பங்கு கற்கண்டு அல்லது வெள்ளைச் சர்க்கரை சேர்த்துப் பாகு பதத்தில் காய்ச்சி வைத்துக் கொண்டு சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்னைகள் நீங்கும்.

அன்றாடம் பாதி மாதுளம்பழம் அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வந்தால் மலக்கட்டு நீங்கும், மாதுளம் பழச்சாறும், இஞ்சிச்சாறும் சம அளவு எடுத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் எவ்வளவு கடுமையான இருமலும் குணமாகும். மாதுளம்பழத்தின் விதைகளை எடுத்து வெயிலில் உலர்த்திப் பொடி செய்து தினமும் பசும்பாலில் சிட்டிகை அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் தாது பலம் பெற்று உடலும் நலம் பெறும். இது தவிர, மேலே குறிப்பிட்டது போல் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு நீங்கும்.

கோடை‌க் கே‌ற்ற மாது‌ள‌ம்பழ‌ம்:

மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் தொட‌ர்‌ந்து ஏ‌ற்படு‌ம் விக்கல் உடனே நிற்கும். ஏதேனு‌ம் காரண‌த்‌தி‌னா‌ல் ‌நீ‌ர் அரு‌ந்தாம‌லோ, உட‌லி‌ல்‌ நீ‌ர்‌த் த‌ன்மை குறை‌ந்த அ‌திக தாக‌ம் எடு‌க்கு‌ம் போதோ மாதுள‌ம்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடியாக தாக‌ம் த‌‌ணியு‌ம். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். உட‌ல் குளிர்ச்சியடையும். கோடை‌க் கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் காய்ச்சலு‌க்கு‌ம் மாதுள‌ம்பழ‌ம் மரு‌ந்தாக அமையு‌ம்.

மாதுளம்பழச் சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டு வர வே‌ண்டு‌ம். இ‌ப்படி ஒரு மாத கால‌ம் உ‌ட்கொ‌ண்டு வ‌ந்தா‌ல் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகு‌ம். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *