(பேரூந்து கட்டண உயர்வு போதவில்லையாம் – நாளை வேலைநிறுத்தம்)
எதிர்பார்த்த அளவு பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாமையினால் நாளை(16) நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பேரூந்து கட்டணம் 20% மாகவும், ஆகக் குறைந்த கட்டணத் தொகை 15 ரூபாவாகவும் உயர்த்தப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அரசிடம் கோரியிருந்த நிலையில், பேரூந்து கட்டணம் 6.56%இனால் அதிகரிக்கப்பட்டு ஆகக் குறைந்த கட்டணத் தொகையில் எவ்வித மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க இன்று(15) அரசு தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.