(அதிர்ச்சி கொடுத்த வாகன பார்க்கிங்… #வெள்ளவத்தை)
வெள்ளவத்தையில் வாகனத்தை நிறுத்த சென்ற நபருக்கு சில நாட்களில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
வெள்ளவத்தையிலுள்ள வாகன நிறுத்தும் இடம் ஒன்றில் 30 ரூபாய் கட்டணத்தை செலுத்த தவறிய ஒருவருக்கு 10 000 ரூபாய் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது.
13 நாட்களுக்கு பின்னர் குறித்த நபருக்கு 10120 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி வெள்ளவத்தையில் தனது காரை நிறுத்தியிருந்த குறித்த நபர், வாகன நிறுத்தும் இடத்திற்கு அருகில் உள்ள இயந்திரத்தில் 30 ரூபா பணத்தை செலுத்த மறந்துள்ளார்.
இயந்திரத்தின் ஊடாக பணம் செலுத்தப்பட வேண்டும் என அந்த நபர் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
பணம் அறவிட ஒருவரும் அந்த இடத்தில் இல்லாமையினால் ஒரு மணித்தியாலத்திற்கு 30 ரூபா என்ற கட்டணத்தை செலுத்தாமல் அவ்விடத்தை விட்டு அவர் சென்றுள்ளார்.
13 நாட்களுக்குப் பிறகு, தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட நிறுவனத்தால் 10,120 ரூபாய் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் அதனை செலுத்த தவறியுள்ளார்.
பின்னர் அவர் கொழும்பு மாநகர சபையின் உத்தரவுக்கு அமைய குறித்த அபராத தொகையை செலுத்தியுள்ளார்.