• Sun. Oct 12th, 2025

ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி

Byadmin

May 18, 2018

(ஸ்பைடர்மேனை நேரில் பார்த்தேன்- விராட் கோலி)

11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி பெங்களூர் 6-வது பெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது.

டிவில்லியர்ஸ் 39 பந்தில் 69 ரன்னும், மொய்ன் அலி 34 பந்தில் 65 ரன்னும், கிராண்ட் ஹோம் 17 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 204 ரன்னே எடுத்தது. இதனால் பெங்களூர் 13 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் பிளேஆப் சுற்று வாய்ப்பில் பெங்களூர் நீடிக்கிறது.

ஐதராபாத் அணி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹால்ஸ் அடித்த பந்தை எல்லை கோர்ட்டில் நின்ற டிவில்லியர்ஸ் பாய்ந்து ஒரு கையில் கேட்ச் பிடித்து பிரமிக்க வைத்தார்

வெற்றி குறித்து பெங்களூர் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

வெற்றி உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது. பனியின் தாக்கம் இருந்தது. ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டிவில்லியர்ஸ், மொய்ன் அலி, கிராண்ட் ஹோம் பேட்டிங் அபாரமாக இருந்தது.

எல்லை கோட்டில் டிவில்லியர்ஸ் பாய்ந்து கேட்ச் பிடித்தது ‘ஸ்பைடர்மேன்’ போல் இருந்தது. இதை நீங்கள் சாதாரண மனிதனாக இருந்தால் செய்ய முடியாது. அவரது பீல்டிங் நம்ப முடியாத வகையில் இருந்தது.
அவரது ஷாட்டுகள் இன்னமும் எனது பிரமிப்பில் இருந்து செல்லவில்லை. இந்த வெற்றி உத்வேகத்தை கடைசி போட்டியில் (ராஜஸ்தானுக்கு எதிராக) கொண்டு செல்வோம்.

தற்போது 11 பேர் கொண்ட ஆடும் லெவன் அமைந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொயின் அலி தனது பணியை நன்றாக செய்தார். அவருக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை இரு கைகளிலும் நன்றாக பிடித்து கொண்டுள்ளார்.

எங்களது சொந்த மைதானமான பெங்களூரில் இது கடைசி ஆட்டம். ரசிகர்களின் ஆதரவு அற்புதமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.#IPL2018 #viratkohli #AbDeVilliers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *