(ஏ-9 வீதியில் ஒருபகுதி தாழிறங்கியது)
கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியின், ஒருபகுதி தாழிறங்கியுள்ளமையினால், அவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில், அலவத்துகொட 8ஆம் மைல்கல் பகுதியிலேயே, வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய காலநிலை தொடருமாயின், குறித்த வீதியின் சில பகுதிகள் தாழிறங்கும் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.