(மக்கள் விடுதலை முன்னணியின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு)
மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) நாளை(22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘வரிசுமையை நீக்கு! பொருட்களின் விலைகளை குறை!’ எனும் தொனிப்பொருளிலான, ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியன, ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சி தெரிவித்துள்ளது.
குறித்த இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது, கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.