கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம் மக்கள் முன்வைத்தகோரிக்கைகளின் பிரகாரம் மட்டக்களப்புமாவட்டத்தின் ரிதீதென்ன ஜயந்தியாய மற்றும் நாவலடிஆகிய பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய திடீர்விஜயம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்,
இதன்போது தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரிதீதென்ன,ஜெயந்தியாய மற்றும் நாவலடி ஆகிய பகுதிகளுக்கு கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் அண்மையில் வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
இதன் போது தமது பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சரிடம் மக்கள் முறையிட்டிருந்தனர் .
குடிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றைப் பெற்றுத் தருவதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்த்தன் பிரகாரம் இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு விஜயம் செய்து குறித்த பகுதிகளிலுள்ள நீர் மாதிரிகளை ஆராயந்தனர்,
அங்கு மக்கள் பயன்படுத்தும் கிணறுகள்,குழாய்க் கிணறுகள் போன்றவற்றையும் நீர் வழங்கல் அமைச்சின் அதிகாரிகள் ஆராயந்தனர்.
அத்துடன் மக்களுக்கு குடிநீரைப்பெற்றுக் கொடுப்பதற்கான வாய்ப்புக்கள்தொடர்பிலும் அங்குள்ள நீர் நிலைகள்தொடர்பிலும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உள்ளிட்ட குழுவினர் ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.