• Sat. Oct 11th, 2025

ஆரோக்கியமும் புனித றமழானும்

Byadmin

May 23, 2018

தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தல்,ஏழைகளின் பசியை உணர்தல் என்பன நோன்பனாது இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட காரணமாக அமைகிறது.நோயாளிகளாக இருப்பவர்களுக்கு நோன்பு கடமையல்ல.பின்னர் அதற்கு மாற்றிடாக ஆரோக்கியமாக இருக்கும் காலங்களில் நோன்பை நோற்க முடியும்.இஸ்லாம் ஒரு மனிதனை அவனது தகுதிக்கு அப்பால் வணக்க வழிபாடுகளை சிரமப்படுத்துவதில்லை.இதனாலேயே எல்லா கடமைகளிலும் பல சலுகைகளையும் மாற்றிடையும் இஸ்லாம் தந்துள்ளது.

பல மடங்கு நன்மைகளை அள்ளி தரும் இப்புனித றமழானில் சிறிய சிறிய நோய்களுக்காக காரணமின்றி நோன்பை விடுபவர்களை சமூகத்தில் பரவலாக காணலாம்.றமழானில் விடுபட்ட நோன்புகளை றமழான் அல்லாத காலங்களில் நோற்கும் போது அதற்குறிய கடமை நிறைவேறுகின்றது தவிர றமழானில் இருக்கின்ற சிறப்பு மற்றைய காலங்களில் கிடைப்பதில்லை.

நோயாளிகள் நோன்பு பிடிப்பதால் தமது ஆரோக்கியம் பாதிக்கப்படும் என அஞ்சினால் றமழான் ஆரம்பிக்க முன்னே வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
பின்வருவோருக்கு றமழானில் வைத்திய ஆலோசனை விஷேடமாக தேவைப்படும்.வைத்தியரின் ஆலோசனைப்படி நோன்பு நோற்க முடியாது என்றால் இவர்களுக்கு இஸ்லாத்தில் தாரளமான இடம் உண்டு.
👉Type 1 Diabetes MELLITUS (முழுமையாக Insulinஇல் தங்கியுள்ள நீரிழிவு நோயாளிகள்)
👉Coronary Heart Diseases/Ischaemic Heart Diseases(மாரடைப்பு/இதய குழாய்கள் அடைப்புடைய நோயாளிகள்)
👉Renal Stone/Renal Failure
👉Cancer(புற்றுநோய்)
👉Epilepsy/Fit(வலிப்பு)
👉கர்ப்பிணி/தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள்(Pregnancy/Lactating Mother)

நோன்பு என்பது 14-16 மணித்தியாலங்கள்  ஏதும் உண்ணாமல்,அருந்தாமல் இருப்பதோடு உளக்கட்டுப்பாட்டுடன் இருத்தலாகும்.இதன்போது உடலில் வழமையை விட பல்வேறுபட்ட மேலதிகமான இரசாயன தாக்கங்கள் நடைபெற்று உடலியக்கங்களுக்கு தேவையான சக்திகள் வழங்கப்படுகின்றன.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘றமழானும் ஆரோக்கியமும்(Ramadan&Health) என்ற முதலாவது சர்வதேச மாநாட்டிலே 50ற்கும் மேற்பட்ட Researches முஸ்லிம்,முஸ்லிம் அல்லாதவர்களிடம் இருந்து சமர்ப்பிக்கப்பட்டது.இதன்போது நோன்பு மூலம் பல மருத்துவ(Medical Benefits),உளவியல்(Psychological Benefits) நன்மைகள் உள்ளதாக தெரியப்படுத்தப்பட்டது.அதன் பின்னரும் நோன்பின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் சான்று பகிர்கின்றன.

நோன்பு நோற்பதால் மேற்படி 14-16 மணித்தியாலய Fastingஇல்
👉பல்வேறுபட்ட Non Communicable Diseasesற்கு சாதகமானதாக
அமைகிறது.நோன்பின் போது உடலில்/இரத்தத்திலுள்ள மேலதிக Sugar ,Cholesterol என்பன பயன்படுத்தப்படுவதோடு மேலதிகமான ஈரலில் மற்றும் Adipose Tissueஇல் சேமிக்கப்பட்டுள்ள Glycogen,Fatty Acid என்பன உடைக்கப்படுவதால் உடற்பருமன் அதிகமுடையவர்களுக்குறிய(Obesity) Ideal Treatment ஆக நோன்பு கருதப்படுகிறது.மேற்படி Metabolism நடைபெறுவதன் மூலம் Essential Hypertension,Stable Non Insulin Diabetes Mellitus போன்றவற்றிற்கும் Benefit ஆக றமழான் அமைகிறது.

👉Digestive System Rest(சமிபாட்டு தொகுதிக்குறிய ஓய்வாக அமைகிறது)
👉உடம்பிலுள்ள நச்சுப்பொருள்கள் அகற்றப்படல்(Detoxification)
👉உடம்பில் பல்வேறுபட்ட புற்றுநோய்கள் செயற்பாடற்ற Procarcingen——> செயற்பாட்டுக்குறிய Carcinogen ஆக மாற்றப்படுவதன் மூலம் உருவாகின்றன.நோன்பின் மூலம் மேற்படி உடம்பிலுள்ள Procarcinogen அழிக்கப்படுகின்றன.
👉Resolution of Inflammatory Diseases like Rheumatoid Arthritis

நோன்புடைய காலங்கள் சிறந்த உளவியல் ரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்த உதவுகிறது.நோன்பு நேரங்களில் சாதாரண காலங்களில் அணுமதிக்கப்பட்ட(Halal) பல விடயங்கள் கூட குற்றமாக கருதப்படுகிறது.எனவே சாதாரண காலங்களில் தவிர்க்கப்பட வேண்டிய புகைத்தல்(Smoking),மதுபாவனை(Alcohol) மற்றும் வெற்றிலை பாவணை(Battle  Chewing)போன்றவை நோன்பு காலங்களில் இதன் பாவணை சம்பந்தமாக எழுத தேவையில்லை.
மற்றைய காலங்களில் இவைகளின் பாவணை இல்லாமல் இருக்க முடியாது என்பவர்களுக்கு நோன்பானது இவைகளை விட்டு தூரமாக்கி சிறந்த ஆண்மீக பயிற்சி மூலம் உளக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதுடன் மற்றைய காலங்களிலும் இவை போன்ற உடலுக்கு தீமை தரக்கூடிய பல்வேறுபட்ட தீயசெயல்களில் இருந்து விலகி இருக்க உதவுகிறது.
இதை தவிர நோன்பு காலங்களில் அடுத்த மனிதனுடன் சண்டை செய்தல்,குரோதம் இவைகளை தவிர்த்து அடுத்தவர் சண்டைக்கு வந்தாலும் தான் நோன்பாளி என விலகி நடத்தல்,அடுத்தவர் மனம் புண்படாது நடத்தல் என பல்வேறுபட்ட சிறந்த மனித இயல்புகளை ஏற்படுத்துவதோடு நோன்பு முடிந்த பின்னும் மற்றைய காலங்களிலும் சிறந்த மனிதனாக வாழ வழி செய்கிறது.

சென்ற றமழானில் எம்முடன் இருந்த எத்தனையோ உறவுகள் இன்று எம்முடன் இல்லை.பல்வேறுபட்ட நோய்கள் வயது வித்தியாசமின்றி தினம் தினம் எம்மை துரத்துகின்றது.எனவே இது எமது கடைசி றமழானாக கருதி அடுத்த றமழானில் உயிருடன் இருப்போமோ/ஆரோக்கியத்துடன் இருப்போமோ என கருதி மருத்துவ நன்மைக்காகவும் இறைதிருப்தியை முழுமையாக நாடி றமழானை முழுமையாக பயன்படுத்துவோம்.

நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician 
Doha-Qatar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *