(‘கர்ப்பிணி மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களும் றமழானும்’ மருத்துவ,இஸ்லாமிய பார்வையில்)
கர்ப்பிணி/தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் நோயாளிகளாக கருதப்படாத போதும் வழமையான காலங்களை விட
இக்காலங்களில் தினம்தோறும் மேலதிக சக்திகள்,நீர் அதிகம் தேவைப்படும்.இதனால் நோன்பு நோற்கும்போது சிலவேளை தமது ஆரோக்கியத்திற்கு பாதிப்பாக அமையலாம்.
கர்ப்பிணி தாய்மார்கள் றமழான் காலத்தில் நோன்பு நோற்க முன் மகப்பேறு விஷேட வைத்திய நிபுணரை(VOG) சந்தித்து வைத்திய ஆலோசனை பெறுவது சிறந்ததாகும்.இதிலும் குறிப்பாக பின்வருவோர் விஷேட ஆலோசனை பெற வேண்டும்.
👉Gestational Diabetes Mellitus/Chronic Diabetes Mellitus(கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு/நீண்ட கால நீரிழிவு நோய்)
👉Pregnancy Induced Hypertension/Chronic Hypertension(கர்ப்ப காலத்தில் ஏற்படும் Pressure/நீண்ட கால Pressure)
👉Anaemia Complicated Pregnancy(குருதிச்சோகையுடனான கர்ப்பம்)
👉Heart Disease Complicated Pregnancy
👉Epilepsy Complicated Pregnancy(வலிப்பு நோயுடன் கூடிய கர்ப்பம்)
👉Twins/Multiple Pregnancy
👉Psychiatric Disorders
கர்ப்பிணி தாய்மார்கள் நோன்பு பிடிப்பதனால் ஏற்படும் விளைவுகள் சம்பந்தமாக பல ஆராய்ச்சிகள் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் கர்ப்பிணி தாய்மார்கள் நோன்பு நோற்பதால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படும் என திட்டவட்டமாக கூறப்படவில்லை.இருந்த போதும் பல ஆராய்ச்சிகளின் படி கர்ப்ப காலங்களில் ஆரம்ப மூன்று மாதங்கள்(First Trimester) நோன்பு நோற்காமல் இருப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.
கர்ப்ப காலத்தின் ஆரம்ப மாதங்களில் அதிக Nutrition தேவைப்படும்.இக்காலங்களில் நோன்பு நோற்கும் போது பிறக்கும் குழந்தைகள் சாதாரண நிறைவுடையதாகவே இருப்பதாக சில ஆராய்ச்சிகள் கூறிய போதும் சில ஆராய்ச்சிகளின் படி நிறை குறைவானதாகவோ(Low Birth Weight) அல்லது சாதாரண நிறையுடன் பிறந்தாலும் பிற்காலங்களில் learning difficulties,intelligent குறைவாக காணப்படலாம் என கூறப்படுகிறது.
கர்ப்ப காலங்களின் ஆரம்ப மூன்று மாதங்களில் அனேகமாக தாய்மார்களுக்கு வாந்தி( Vomiting),குமட்டல்(Nausea),
மயக்கம்/தலைச்சுற்று(Faintishness/Dizziness),சாப்பாட்டில் விருப்பமின்மை(Loss Of Appetite) என்பன அதிகம் காணப்படும்.இதனால் அதிக நீரிழப்பு(Dehydration) மற்றும் உடம்பு Weakஆகவும் காணப்படுவார்கள்.நோன்பு நோற்கும் போது இந்த நிலமை அதிகரிக்கலாம்.இவ்வாரவனர்கள் நோன்பு பிடிக்க தேவையில்லை.இவர்களுக்கு இஸ்லாத்தில் போதிய அணுமதி உண்டு.
பல கர்ப்பிணி தாய்மார்கள் ஆரம்ப மூன்று மாதங்கள் எந்தவித அறிகுறி இல்லாமல் காணப்படுவார்கள்.நன்கு ஆரோக்கியமாகவும் உறுதியான மனநிலையுடனும் உள்ளதுடன் நோன்பு பிடிப்பதால் தனது குழந்தைக்கோ தனக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்ற மனநிலையில் உள்ள தாய்மார்கள் வைத்திய ஆலோசனையுடன் நோன்பு நோற்கலாம்.இவர்கள் பின்வரும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
👉தமது உணவின் Nutrition சம்பந்தமாக அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.தமது உணவில்
50%_Carbohydrates
25%_ Protein
10-15%_ தேவையான Fatty Acid
மற்றும் தேவையான கனியுப்புகள்(Minerals)&Vitamins.
👉அடிக்கடி தமது நிறையை அளக்க வேண்டும்.போதிய Weight gain அல்லது Weight Loss எனில் உடனே நோன்பை பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
👉போதிய ஓய்வு/கடின வேலை செய்யாதிருத்தல்.
பல மகப்பேறு வைத்திய நிபுணர்களின் கருத்துப்படி எவ்வித சிக்கல்கள் இல்லாத கர்ப்பிணி தாய்மார்கள்(Non Complicated Pregnancy/Normal Pregnancy) கர்ப்ப காலத்தின் நடுப்பகுதியான 4-7மாதங்களில்(second Trimester) நோன்பு நோற்பதால் தாய்க்கோ அல்லது குழந்தைக்கோ எவ்வித பாதிப்பு இல்லை.
கர்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்கள்(Third Trimester) தாய் அதிக சோர்வுக்கு(Tiredness)உள்ளாக்கப்படுவதுடன் அதிக சக்தி தேவைப்படும்.எனவே இந்த காலங்களிலும் நோன்பு பிடிக்காமல் தவிர்ந்து கொள்வது சிறந்தது.
குழந்தை பிறந்ததிலிருந்து இரண்டு வயதுவரை தாய்ப்பால் வழங்க வேண்டும்.இதில் முதல் ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே(Exclusive Breastfeeding)ஊட்ட வேண்டும்.இக்காலங்களில் தாய்க்கு மேலதிகமான சக்தி தேவைப்படுவதனால் நோன்பு நோற்கும் போது தாய்க்கு சிரமமாக அமையலாம்.அதிலும் குறிப்பாக குழந்தையின் ஆரம்ப மாதங்களில் ஒவ்வெரு இரண்டு மணித்தியாலங்களுக்கும் தாய்ப்பால் வழங்க வேண்டும்.
தக்வா எனும் இறையச்சத்தை ஏற்படுத்தல் நோன்பனாது இஸ்லாமியர்கள் மீது கடமையாக்கப்பட காரணமாக அமைகிறது.நோயாளிகளாக இருப்பவர்களுக்கு நோன்பு கடமையல்ல.பின்னர் அதற்கு மாற்றிடாக ஆரோக்கியமாக இருக்கும் காலங்களில் நோற்க முடியும்.இஸ்லாம் ஒரு மனிதனை அவனது தகுதிக்கு அப்பால் வணக்க வழிபாடுகளை சிரமப்படுத்துவதில்லை.இதனாலேயே எல்லா கடமைகளிலும் பல சலுகைகளையும் மாற்றிடையும் இஸ்லாம் தந்துள்ளது.
நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது நீங்கள் உள்ளச்சமுடையோராய் ஆக வேண்டும் என்பதற்காக. (அல் குர்ஆன் 2:183)
உங்களில் எவரேனும் பிரயாணத்திலோ அல்லது நோயாளியாகவோ இருந்தால் அவர் வேறு நாட்களில் நோற்றுவிடவும். (அல் குர்ஆன் 2:184,185)
நோன்பை விடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள்:
1. நோய் அதிகரிப்பதையோ, நோய் நிவாரணம் பெறும் காலம் நீடிப்பதையோ பயப்படுகின்ற அல்லது நோன்பு நோயாளிக்கு இடையூறை சேர்க்கின்ற நோயாளி.
2.ஆபத்தில் சேர்க்கும் கடுமையான தாகம் உள்ளவன், கடுமையான பசி உள்ளவன்.
3.நோன்பு தனக்கோ அல்லது தனது குழந்தைக்கோ இடையூறு ஏற்படும் கர்ப்பிணி.
4.தனக்கோ அல்லது பால் குடிக்கின்ற குழந்தைக்கோ இடையூறு ஏற்படும் பெண்மணி.
மாதவிடாய் ஏற்பட்டப் பெண்கள் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும் என்பதற்கு நேரடியாக ஹதீஸ் இருப்பதுப் போன்று கர்ப்பிணி – பாலூட்டும் பெண்கள் நோன்பை களா செய்யலாம் என்பதற்கு எந்த ஒரு ஹதீஸூம் கிடைக்கவில்லை என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் கர்பிணித் தாய்கும் பாலூட்டும் தாய்கும் நோன்பை அகற்றி விட்டான் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
மேற்படி பல சலுகைகளை இஸ்லாம் கர்ப்பிணி/தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு தந்துள்ள போது சிலர் தம்மை தாமே கஷ்டப்படுத்தி நோன்பு நோற்று மாற்றுமத வைத்தியர்கள்/Nursing Officers/Midwives முன்னால் இவர்களின் சிரமத்தை பார்க்கின்ற போது அவர்களால் எம்மை பார்த்து ஏன் இந்தளவு உங்களது மார்க்கம் இறக்கமின்றி கடமைகளை சிரமப்படுத்துகிறார்கள் என கேட்க தோன்றுகிறது.ஒரு சிலரின் செயற்பாட்டால் ஒட்டுமொத்த இஸ்லாமிய மார்க்கத்தின் மீதும் தவறான எண்ணம் வர தோன்றுகிறது.இஸ்லாமிய பார்வையில் கடமைகளாக இருந்தபோதும் அவை சலுகைகளாக அமைகின்ற முறையான சந்தர்ப்பத்தின் போது அவற்றை அணுபவிப்பதே சிறந்தது.
நன்றி
Dr. A.H. Subiyan
MBBS(SL),Diploma in Psychology (SL)
General Scope Physician
Doha-Qatar.