• Sun. Oct 12th, 2025

ஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்

Byadmin

May 24, 2018

(ஆபத்தான நிலையில் அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல்)

இன்று வேளைப்பளு காரணமாக அஸர் தொழுகையை நிறைவேற்ற அம்பாறை ஜும்ஆ பள்ளிவாலுக்கு சென்று இருந்தேன்.
 
பள்ளிவாயல் நடுவில் சிவப்புநிற கையிறு கட்டப்பட்டு பள்ளிவாயல் நடுவில் தொழுகை நடாத்தப்பட்டது ஏன்?  யென ஆராய்ந்த போது பள்ளிவாயல் கட்டிடம் வெடிப்பு ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
 
அம்பாறை பள்ளிவாயலின் கீழ் அடித்தளத்தில்  பாக்கிங் இருந்தது அதில் தரித்து இருந்த வாகனம்கள்தான் அம்பாறை இனக்கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டது.  இதனால் பள்ளிவாயல்  கட்டிடம் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டு கட்டிடம் சக்தி இழந்து ஆபத்தான அபாயகரமான நிலைக்கு வருகின்றது.
 
வெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரங்களில் அதிகமான சகோதரர் கட்டிடத்தில் நின்று தொழுவதால் கட்டிடம் சக்தி இன்மையால் மேலும் ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டிவருமென அச்சம் தெரிவிக்கின்றனர்.
 
அம்பாறை வன்முறையில் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல்  சேதங்களை அரசாங்கம் செய்து தருவதாக வாக்குறுதி அழிந்திருந்தது. பள்ளிவாயல் கட்டிடம் முற்றுமுழுதாக பாவிக்க முடியாத நிலைகூட  எதிர்வரும் நாட்களில் ஏற்படலாம்?
நஷ்ட ஈடு தொடர்பான  இழுபறி நிலையால் நஷ்ட ஈடு விடயங்கள் தாமதம் ஆகிக்கொண்டு செல்கிரது.
 
அம்பாறை பள்ளிவாயலின் இந்த அபாயகரமான நிலையை உரிய அதிகாரிகள்  முஸ்லிம் அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு அம்பாறை பள்ளிவாயலை மீழ் புணர்நிர்மானிப்பது தொடர்பில் அவசர நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
 
முஹம்மட் பர்சாத்
-காத்தான்குடி-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *