(கொழும்பின் சில பகுதிகளில் மின் விநியோகம் தடை)
கொள்ளுப்பிட்டியில் உள்ள உப மின் விநியோக கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாக கொழும்பில் சில பிரதேசங்களுக்கு மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டி மற்றும் கொழும்பின் சில புறநகர்ப் பகுதிகளிலும் விநியோகத்தில் தடை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த நிலமையை சீர் செய்வதற்காக தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நிலமை சீராகிவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.