(கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை)
கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் இன்று(28) மூடுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்தனகல ஓயா பெருக்கெடுத்திருப்பதன் காரணமாக அதனை அண்மித்த பாதைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் புதன்கிழமை மீண்டும் சம்பந்தப்பட்ட பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(28) வழங்கப்பட்ட விடுமுறைக்கு பதிலாக மற்றுமொரு தினத்தில் கல்வி நடவடிக்கைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அதிகாரிகளைப் பணித்துள்ளார்.