(இன்று காலை 9 மணி முதல் அடையாள பணிப்புறக்கணிப்பில்)
தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் மேல் மாகாண ஊழியர்கள் இன்று(30) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் அடையாள வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
4 மணி நேர குறித்த இந்தப் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் உரிய முறையில் பதிலளிக்காமையினால் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக நீர் வழங்கல் தொழிற்சங்கத்தின் கூட்டு முன்னணியின் பொறியியலாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.