• Sun. Oct 12th, 2025

ஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்

Byadmin

Jun 16, 2018

(ஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்)

கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் நியூரல் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனத்தில் மொழிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலியால் அதிக தரமுள்ள மொழிமாற்றங்களை இணைய வசதி இல்லாதபோதும் மேற்கொள்ள முடியும்.
செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது. மிகவும் நேர்த்தியான மொழிமாற்றம் செய்ய பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு, அவற்றில் பொருத்தமானவற்றை, கிட்டத்தட்ட மனித குரலிலேயே வழங்கும்.
மொழி தெரியாத, டேட்டா கனெக்டிவிட்டி பெற சிக்கலாக இருக்கும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மொழியும் 35 முதல் 45 எம்பி அளவு கொண்டிருப்பதால், மொபைலில் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளாது.
ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் நியூரல் மெஷின் டிரான்ஸ்லேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆஃப்லைன் டிராஸ்லேஷன் அம்சம் பயன்படுத்தியிருந்தால், ஹோம் ஸ்கிரீனிலேயே பேனர் ஒன்று காட்சியளிக்கும், இதை க்ளிக் செய்ததும் உங்களின் ஆஃப்லைன் ஃபைல்களை அப்டேட் செய்யும்.
ஒருவேளை பயன்படுத்தவில்லை எனில் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் செட்டிங்ஸ் சென்று, ஆஃப்லைனில் பயன்படுத்த வேண்டிய மொழியை டவுன்லோடு செய்யலாம். அடுத்த சில நாட்களில் ஆஃப்லைன் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் செயலியின் 59 மொழிகளில் சேர்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *