• Sun. Oct 12th, 2025

ஒரு மணிநேரம் முட்டைக்கோஸ் இலையை கால்களில் கட்டுவதால் நிகழும் அற்புதம் பற்றி தெரியுமா?

Byadmin

Aug 8, 2025

காய்கறிகளிலேயே மிகவும் குறைந்த அளவு கலோரியும், அதிக ஊட்டச்சத்துக்களும் கொண்ட காய்கறி தான் முட்டைக்கோஸ். இதில் வைட்டமின் சி, பொட்டாசியம், வைட்டமின் கே போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இந்த காய்கறியில் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்களும், அழற்சி எதிர்ப்பு பொருட்களும் அதிகம் நிறைந்துள்ளது.

இத்தகைய முட்டைக்கோஸ் பல நூற்றாண்டுகளாக மூட்டு வீக்கங்கள், வலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முட்டைக்கோஸில் உள்ள வைட்டமின்கள், பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள், ஆந்தோசையனின்கள், க்ளூட்டமைன் போன்றவை தான் காரணம். மூட்டு வலியைக் குறைக்க முட்டைக்கோஸை வலியுள்ள இடத்தைச் சுற்றி கட்டினால், வலி விரைவில் குறையும். இப்போது அதுக்குறித்து விரிவாக காண்போம்.

தேவையான பொருட்கள்:

* முட்டைக்கோஸ்

* அலுமினிய தகடு

* பூரிக்கட்டை/ஒயின் பாட்டில்

* பேண்டேஜ்

* ஓவன்

செய்முறை #1

முதலில் முட்டைக்கோஸின் இலைகளைத் தனியாகப் பிரித்து, நீரில் கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். பின் பூரிக்கட்டை/ஒயின் பாட்டில் கொண்டு சாறு வெளியேறும் அளவில் தேய்க்க வேண்டும்.

செய்முறை #2

பின்பு அலுமினிய தகட்டில் முட்டைக்கோஸை விரித்து, ஓவனில் சில நிமிடங்கள் வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் வலியுள்ள இடத்தில் வைத்து, பேண்டேஜ் பயன்படுத்தி கட்ட வேண்டும்.

செய்முறை #3

பிறகு 1 மணிநேரம் கழித்து கழற்ற வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை புதிய முட்டைக்கோஸ் இலைக் கொண்டு செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

சிவப்பு முட்டைக்கோஸ்

பச்சை முட்டைக்கோஸை விட, சிவப்பு முட்டைக்கோஸில் ஆந்தோசையனின்கள் வளமான அளவில் உள்ளது. எனவே இந்த வகை முட்டைக்கோஸ் கிடைத்தால் பயன்படுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *