• Sun. Oct 12th, 2025

முன்னாள் ஆளுநர் அலவியின் ஓராண்டு நினைவுதினம் இன்று

Byadmin

Jun 15, 2017

முன்னாள் ஆளுநர் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா மறைந்து இன்று (15) வியாழக்கிழமை ஓராண்டு நினைவு தினமாகும். முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல, முழுநாடும் அவரை மறக்க முடியாது என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.

நினைவு தினம் பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நாட்டிலும் சமுதாயத்திலும் ஒரு பிரதான இடத்தை வகித்து முஸ்லிம்களுடைய பிரபலமாகத் திகழ்ந்தவர் அலவி மௌலானா. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஸ். டபிள்யூ ஆர். டி பண்டாரநாயக்காவைப் பின்பற்றி ஒழுகி ஸ்ரீலங்கா சுதரந்திரக் கட்சியில் முஸ்லிம்கள் இணைவதற்கு மிகவும் பாடுபட்டு உழைத்தார்.

எனினும் துரதிஷ்டவசமாக இன்று நல்லாட்சி என்று சொல்லக்கூடிய அரசாங்கத்தை முஸ்லிம்களும் சேர்ந்து ஆட்சியில் அமர்த்தியதும் முதல் அடி விழுந்தது அலவி மௌலானாவுக்குத்தான். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

இன்று 9 மாகாணங்களிலும் ஒரு முஸ்லிம் ஆளுநர் கிடையாது என்பதனையும் இன்று முஸ்லிம் சமுதாயம் மிகவும் வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருக்கின்றது.

எனவே  அவ்வியாக்களை, மார்க்க மேதைகளை, அறிஞர்களை, கற்றறிந்தோரை மதித்த அலவி மௌலானாவுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கம் கிடைக்க துஆச் செய்கிறேன். அத்தோடு, நாட்டின்  ஏனைய இஹ்வான்களும் இப் புனித ரமழான் மாதத்தில் அவருக்கு துஆச் செய்யுமாறும் முஸ்லிம் முற்போக்கு முன்னணி வேண்டுகோள் விடுக்கின்றது – என்றும் தெரிவித்துள்ளார்.

-எம்.எஸ்.எம்.ஸாகிர் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *