• Sat. Oct 11th, 2025

டிரம்ப் மற்றும் கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்

Byadmin

Jun 25, 2018

(டிரம்ப் மற்றும் கிம் சந்திப்புக்காக ரூ.81 கோடி செலவு செய்த சிங்கப்பூர்)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதற்காக இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்புக்காக 81 கோடி ரூபாயை சிங்கப்பூர் அரசு செலவு செய்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், சிங்கப்பூரின் டிரம்ப் – கிம் சந்திப்புக்காக 81.50 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. இது 12 மில்லியன் அமெரிக்க டாலராகும். முதலில் கணிக்கப்பட்ட தொகையை விட சற்று குறைவாகும் என தெரிவித்துள்ளது. #Singapore #TrumpKimSummit

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *