(தினமும் இதை உணவில் சேர்த்தால் ஆண்மைச்சுரப்பி, மார்பகம், கல்லீரல் பகுதியில் புற்றுநோய் தாக்காது..!)
பீற்றூட் மிகவும் ஆரோக்கியமான உணவு. இதனை எமது தினசரி உணவில் சேர்த்து கொள்வது சிறப்பானது.
பீற்றூட்டில் உள்ள தாவர ஊட்டச்சத்தான betalains சக்தி வாய்ந்த ஆண்டிஒக்ஸிடண்டாகவும் வீக்கத்தைக் குறைப்பதற்கும், நச்சுத் தன்மையை நீக்குவதற்கும் பயன்படுகின்றது. இது பிறக்கும் போது ஏற்படும் குறைபாடு, புற்றுநோய், இதய நோய் போன்றவை வராமல் தடுக்கும்.
பீற்றூட் கண்டிப்பாக சாப்பிட வேண்டியதுக்கான காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1. வீக்கத்தைக் குறைக்கும்.
உடலில் வீக்கம் ஏற்படுவதனால் பல நோய்களும் அதனால் தொடர்ச்சியான கோளாறுகள் ஏற்படும். இதில் உள்ள Betaine சூழலினால் ஏற்படும் அழுத்தத்தில் இருந்து புரோட்டின் கலங்களையும், நொதிகளையும் பாதுகாக்கின்றது.
மேலும் உடலில் உள்ள உறுப்புக்களையும் பாதுகாக்கின்றது.
2. ஈரலில் இருந்து நச்சுத்தன்மையை வெளியேற்றும்.
இதில் உள்ள ஆண்டிஒக்ஸிடன் உடலில் இருந்து நச்சுத் தன்மையை வெளியேற்றும். Betaline கலங்களிற்கு உறுதுணையாக இருந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது.
அத்துடன் Pectin ஈரலில் இருந்து முற்றாக நச்சை வெளியேற்றுகின்றது. Betalains நச்சை வெளியேற்றும் சக்தி அதிகம் உள்ளது.