(களத்தடுப்பின் போது குசல் ஜனித் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி)
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
போட்டியில் 144 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கைஅணி துடுப்பாடி வருகிறது.
முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்களையும் இரண்டாம் இன்னிங்சில் 93 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 154 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , மேற்கிந்திய தீவுகள் அணியுடனான மூன்றாம் டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.