(தோற்றாலும் இதயங்களை வென்றன ஜப்பான்!)
இந்த கால்பந்து உலகக் கோப்பையில் எதிர்பார்த்த அணிகள் தோல்வி அடைந்து வெளியேறினாலும்,
பலருடைய இதயங்களை நொறுங்க வைத்தது ஜப்பானின் தோல்வி. தோல்வி அடைந்தாலும் உலக மக்களின் இதயங்களை கவர்ந்ததுடன், புதிய பாடத்தையும் கற்றுத் தந்துள்ளது ஜப்பான் அணி.
21வது ஃபிபா உலகக் கோப்பை ரஷ்யாவில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட பல்வேறு முக்கிய அணிகள் தோல்வி அடைந்து வெளியேறின. இது கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நடந்த நாக் அவுட் சுற்றில் மிகவும் வலுவான பெல்ஜியம் அணியுடன் ஜப்பான் மோதியது. முதல் பாதியில் மிகச் சிறந்த தடுப்பாட்டத்தின் மூலம் பெல்ஜியத்தை கோலடிக்க விடாமல் தடுத்தது.
இரண்டாவது பாதியில் தொடர்ந்து இரண்டு கோல்களை அடித்து பெல்ஜியத்துக்கு அதிர்ச்சியும் அளித்தது. அதன்பிறகு பெல்ஜியம் இரண்டு கோல்கள் அடித்து சமநிலையை உருவாக்கியது. ஆட்டத்தின் கடைசி விநாடியில் கோலடிக்க பெல்ஜியம் வென்றது.
மிகவும் சிறப்பாக விளையாடி, பெல்ஜியத்தை திக்குமுக்காட வைத்த ஜப்பானின் இந்த தோல்வி மைதானத்தில் மிகப் பெரிய அமைதியை ஏற்படுத்தியது. இந்த உலகக் கோப்பையில் இருந்த கடைசி ஆசிய அணியான ஜப்பானும் வெளியேறியது.
-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-