(மத்திய மாகாணசபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் இன்று உத்தியோக பூர்வமாக பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்)
மத்திய மாகாணசபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் இன்று (04.07.2018) உத்தியோக பூர்வமாக பொதுஜன பெரமுன கட்சி அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார். பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னால் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்த அங்கத்துவம் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்வில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இதில் டளஸ் அலகப்பெரும, கெஹலிய ரம்புக்வெல்ல, சமல் ராஜபக்ஸ உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களும், பொது மக்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும், பொதுஜன பெரமுன ஆதரவு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இன்று கண்ட்சி அங்கத்துவம் வழங்கப்பட்டது.