இலங்கையிலுள்ள ரோஹிங்கியர்களை வேறு நாடொன்றுக்கு அனுப்புவதற்காகு நடவடிக்கைகள் துரிதம் – UNHRC
இலங்கையில் தற்போது நிலவி வரும் இக்கட்டான சூழ்நிலையைக் காரணம் காட்டி பூஸா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை வேறு நாடொன்றுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ரோஹிங்கியா அகதிகள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான…
புதிய அரசியல் அமைப்பினை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கப்படாது – மஹிந்த
புதிய அரசியல் அமைப்பினை நிறைவேற்றிக் கொள்ள இடமளிக்கப்படாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், அரச சார்பற்ற நிறுவனங்களின் தேவைக்கு அமைய புதிய அரசியல்…
ஒரு தேங்காயின் அதிகபட்ச விலை 75 ரூபா – மீறினால் தண்டனை
தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 75 ரூபாவாக இருக்க வேண்டும். அதைவிட அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெங்கு உற்பத்திச் சபையின் தலைவர் கபில யகன்தவெல தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தேங்காய் ஒன்றை…
கல்கிஸ்ஸ ரோஹிங்கிய விவகாரம்.. கைதான 5 சந்தேக நபா்கள் கல்கிசை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவ விபரம்
இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலும் கல்கிசை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிராலும் இன்று (1) மு.ப.கல் 12.00 மணிக்கு கல்கிசை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் 5 சந்தேக நபா்கள் பொலிசாரினால் ஆஜா்படுத்தப்பட்டனா். இவா்கள் கடந்த வாரம் கல்கிசையில் உள்ள மியன்மாா் ரேங்கிய முஸ்லீம்கள்…
கல்கிஸ்ஸ றோஹிங்யா விவகாரம்… 6 பேரை பிடித்து விட்டோம். இன்னும் சிலரை விரைவில் கைது செய்வோம்
கல்கிஸையில் றோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் கலகம் விளைவித்தசம்பவம் தொடர்பில், மேலும் சிலர் கைதுசெய்யப்படவுள்ளனரென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரதெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் 8 பேர் அடையாளம்காணப்பட்டனர். அவர்களுள் 6 பேர் கைது செய்யப்பட்டு,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏனையோரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததுரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்கிஸையில் இடம்பெற்ற குறித்த சம்பவமானது, முழுக்கமுழுக்க சட்டவிரோதமானது எனவும், இந்தச் சம்பவம்,தனிப்பட்ட தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது எனவும்,பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். இதேவேளை, றோகிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராககல்கிஸையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம், கலகம்தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுஅவசரக்கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்,சிறைச்சாலைகள் அமைச்சர், நீதியமைச்சர் ஆகியோருக்குஅழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்உள்ளூர் பிரதிநிதியும் இந்தக் கூட்டத்துக்குஅழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.