• Sat. Oct 11th, 2025

கல்கிஸ்ஸ றோஹிங்யா விவகாரம்… 6 பேரை பிடித்து விட்டோம். இன்னும் சிலரை விரைவில் கைது செய்வோம்

Byadmin

Oct 1, 2017

கல்கிஸையில் றோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்னால் கலகம் விளைவித்தசம்பவம் தொடர்பில், மேலும் சிலர் கைதுசெய்யப்படவுள்ளனரென, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரதெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 8 பேர் அடையாளம்காணப்பட்டனர். அவர்களுள் 6 பேர் கைது செய்யப்பட்டு,விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஏனையோரையும் கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்ததுரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கல்கிஸையில் இடம்பெற்ற குறித்த சம்பவமானது, முழுக்கமுழுக்க சட்டவிரோதமானது எனவும், இந்தச் சம்பவம்,தனிப்பட்ட தேவைகளுக்காகவே நடத்தப்பட்டது எனவும்,பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

இதேவேளை, றோகிஞ்சா முஸ்லிம் அகதிகளுக்கு எதிராககல்கிஸையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம், கலகம்தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுஅவசரக்கூட்டம் ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்,சிறைச்சாலைகள் அமைச்சர், நீதியமைச்சர் ஆகியோருக்குஅழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்உள்ளூர் பிரதிநிதியும் இந்தக் கூட்டத்துக்குஅழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *