வாட்சப்பில் ஹாட்டின் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு… 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை. #சவூதி
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.https://gulfnews.com/world/gulf/saudi/sending-red-heart-emojis-on-whatsapp-can-land-user-in-jail-in-saudi-arabia-1.85676931 சவூதி அரசின் சைபர் கிரைம்…
தொலைபேசியை வழங்க தாயார் மறுத்ததால், உயிரை மாய்த்துக் கொண்ட 12 வயது சிறுவன் #இலங்கை
12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் தனது தாய் கைத்தொலை பேசியைக் கொடுக்க மறுத்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று அனுராதபுரம் தஹயியாகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் அனுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியின் ஏழாம் தர மாணவர் என அடையா ளம் காணப்பட்டுள்ளார்.கைத்தொலைபேசியில் “Game”…
இந்து சமுத்திர submarine cable கட்டமைப்பில் கோளாறு… இலங்கையில் இணையவசதி துண்டிக்கப்படுமா?
இந்து சமுத்திரத்தில் கடலுக்கு அடியில் காணப்படும், இணையத்தள வசதியை வழங்கும் சர்வதேச நீர்மூழ்கி கேபள் (submarine cable) கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக இலங்கையில் இணைய இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த சர்வதேச நீர்மூழ்கிக் கேபிள்…
“கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க முடியாது” – டயானா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்த ஒருபோதும் இடமளிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்தார். கம்பளை பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா மகளிர் அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு…
வானொலி முஸ்லிம் சேவையில், கலாபூஷணம் N.M. நூர்தீன் குறித்த நினைவலைகள்
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் நாளை (2022.02.15) செவ்வாய்க்கிழமை இரவு 8.15 அளவில் இடம்பெறவிருக்கும் முஸ்லிம் சேவைக்குப் பங்களிப்பு நல்கிய மூத்த கலைஞர்களை இளைய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வழிவகுக்கும் ” பாரம்பரியம்” நிகழ்ச்சியில் ‘மூஷிக்நூரி’ இசைக்கோ – கலாபூஷணம் கலாநிதி…
இலங்கைக்கான அமெரிக்க த்தூதுவராக ஜுலி சங் பதவிப்பிரமாணம்
இலங்கைக்கான புதிய அமெரிக்கத்தூதுவராக ஜுலி சங்கை நியமிப்பதற்கு கடந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க செனட்சபை அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில், அவர் இலங்கைக்கான தூதுவராக சில பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு வாய்ப்பு
நாட்டில் 6 மணிநேர தொடர் மின் துண்டிப்பை மேற்கொள்ளவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் ஏப்ரல் மாதமாகும்போது நீர் மின் உற்பத்திக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென மின்சார சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய,…
பொலன்னறுவையில் காட்டுயானை தாக்கி ஒருவர் பலி
பொலன்னறுவை – அரலகங்வில பொலிஸ்பிரிவுக்குட்பட்ட எல்லேவௌ பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். எல்லேவௌ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குள்ளான குறித்த நபர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.…
சமுர்த்தி பயனாளர்களுக்கு ஓர் நற்செய்தி
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்தி கொடுப்பனவினை நூற்றுக்கு 28 சதவீதத்தினால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய கொடுப்பனவு அதிகரிப்பு நாளை முதல் அமுல்படுத்தப்படும் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். அநுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய மூவர் கைது
அநுராதபுரம் – கல்னேவ பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அவுக்கண பிரதேசத்தில் புதையல் தோண்டிய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றத் தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.…