21 ஆவது திருத்தம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் இன்று
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் இன்று (03) கலந்துரையாடப்படவுள்ளது. அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 21வது திருத்தம்…
லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை
16,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செவ்வாய்கிழமை வந்தடைந்த எரிவாயு தாங்கியின் இறுதி சரக்கு இன்று சந்தைக்கு வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் விற்பனையாளர்களின் பட்டியல் லிட்ரோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.…
யூரியா வழங்க உலக வங்கி இணக்கம்
எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக்குத் தேவையான யூரியா பசளையை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையின் உணவுப்பற்றாக்குறை நெருக்கடியின் ஆணிவேர் பிரச்சினையான இரசாயனப் பசளை பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கடுமையான முயற்சிகளை…
தொலைபேசி, இணைய பாவனையாளர்களுக்கான அறிவிப்பு: கட்டண அதிகரிப்பு குறித்து தகவல்
இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12%ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
IMF இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் தொகையின் அளவு
குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடன் ஒரு விரிவான நிதி வசதியின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளதாக ரெய்ட்டர்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இம்மாதம் முதல் வாரத்தில்…
இன்று முதல் மீண்டும் மின்வெட்டு
இன்று (02) முதல் நாடளாவிய ரீதியில் மீண்டும் இரவுநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை காரணமாக மே 23 ஆம் திகதி முதல் இரவு வேளைகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், இன்று…
பொருட்கள் சிலவற்றின் விலைகள் 100 சதவீதத்தினால் அதிகரிப்பு – நிதியமைச்சின் இன்றைய அறிக்கையினால் இலங்கையில் மேலும் நெருக்கடி
369 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இன்று (01) முதல் அமலுக்கு வரும் வகையில் தளர்த்துவற்கு தீர்மானித்துள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு அறிவித்துள்ள நிலையில், பல உற்பத்திகளுக்கு 100% கட்டண விகிதத்தையும் இன்று (01) முதல்…
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்படும்.
டீசல் தட்டுப்பாட்டுக்கு உடனடியாக தகுந்த தீர்வொன்று வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சகல தனியார் பஸ் சேவைகளும் இடைநிறுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர்…
சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலை அதிகரிக்கப் பட்டது.
வற் வரி அதிகரிப்பு காரணமாக இன்று (ஜூன் 01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையின் டிஸ்டில்லரீஸ் நிறுவனமும் (DCSL) உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பணவீக்கம் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் முக்கிய பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. இது மே மாதத்தில் 39.1 சதவீதமாக உயர்ந்துள்ளதென இன்றைய தினம் வெளியான புதிய புள்ளிவிபரங்களில் தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் பணவீக்கம் இதேவேளை, மே மாதத்தில் உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதமாக பதிவாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது. மே…