• Mon. Oct 13th, 2025

யூரியா வழங்க உலக வங்கி இணக்கம்

Byadmin

Jun 2, 2022

எதிர்வரும் பெரும்போக பயிர்ச்செய்கைக்குத் தேவையான யூரியா பசளையை வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உணவுப்பற்றாக்குறை நெருக்கடியின் ஆணிவேர் பிரச்சினையான இரசாயனப் பசளை பற்றாக்குறையை தீர்ப்பதற்கு கமத்தொழில், வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

உலக வங்கி இணக்கம்

பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் அது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் வேண்டுகோள்கள் ஊடாக விவசாயிகளுக்குத் ​தேவையான பசளையை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளில் அவர் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றார்.

அதன் ஒருகட்டமாக அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்றுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது விவசாயிகளுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் பெரும்போக பயிர்ச் செய்கைக்குத் தேவையான யூரியா உரத்தை இலங்கைக்குப் பெற்றுக் கொடுக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *