16,000 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த செவ்வாய்கிழமை வந்தடைந்த எரிவாயு தாங்கியின் இறுதி சரக்கு இன்று சந்தைக்கு வெளியிடப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
உரிய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் விற்பனையாளர்களின் பட்டியல் லிட்ரோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் வரிசையில் நிற்பதைத் தவிர்க்குமாறு நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.