இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்
இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்து வருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் அந்நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தாரிக் அஹமட் ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர். உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவுகளினூடாக அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.…
சபாநாயகரின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சற்று நேரத்தில் ஒன்று கூடுகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சில கட்சித் தலைவர்களுடன் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார். நாட்டில் நிலவும் நிலைமையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக சபாநாயகரின் ஏற்பாட்டில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் சற்று நேரத்தில் கூடவுள்ளனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது
ஜனாதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலகுமாறு கோட்டாபாயவிடம் கோருவதென்று சற்று முன்னர் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமையினைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் அவசர கட்சித்…
அடுத்த வாரமும் பாடசாலை இல்லை
!எரிபொருள் நெருக்கடி காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளின் விடுமுறை அடுத்த வாரமும் நீடிக்கும் எனவும், எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளை ஆரம்பித்து நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.…
ஊரடங்கு தளர்த்தப்பட்டது
நேற்றிரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்று ( இரவு 9 மணி முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
உழ்ஹிய்யாவின் போது பிற சமூகங்களை தூண்டாதீர்கள் – போட்டோ, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பகிராதீர்கள்
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஸுன்னத்தாகும். சில அறிஞர்கள் உழ்ஹிய்யாக் கொடுப்பது வாஜிப் என்றும் கூறியுள்ளனர். உழ்ஹிய்யாக் கொடுப்பது பற்றி, அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் ‘உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.’ (108:02) என்று குறிப்பிட்டுள்ளான். இவ்வணக்கத்தை இஸ்லாம்…
சோவியத் யூனியனில் முஸ்லிம்களுக்கு குர்ஆன் தடை செய்யப்பட்டிருந்த நேரம் அது….”
அல்குர்ஆனின் அற்புதம்! புகழ்பெற்ற எகிப்து காரி அப்துல் பாஸித் அப்போதைய எகிப்து அதிபர் ஜமால் அப்துந் நாஸருடன் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். சோவியத் தலைவர்களுடனான சந்திப்பு அது. கூட்டத்தின் இடைவேளையில், குர்ஆனிலிருந்து சில பகுதிகளை சோவியத் தலைவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அப்துல்…
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடையுத்தரவு ஒன்றை கோரி பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கருவாத்தோட்டம் பொலிஸ் பிரிவினுள் அமைந்துள்ள சில வீதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை வௌியிடுமாறு…
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதல் – ஒருவர் பலி, 3 பேர் காயம்
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (07) இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற இந்த…
ஜப்பான் முன்னாள் பிரதமர் உயிரிழந்தார், துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் கைது
ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அந்த நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, நிகழ்ச்சியில் ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை…