ரணிலின் ஆலோசகராக சாகல
முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ரணிலின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத போதிலும், எரிபொருள் விநியோகம் தொடர்பான அதிபர் ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கையில் அவர் அதிபரின் ஆலோசகராக குறிப்பிடப்பட்டுள்ளார். சாகல ரத்நாயக்க…
புதிய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், பேச்சாளராக பந்துல நியமனம்
நாட்டில் அரசியல், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த விரைவில் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்படுவதற்காக அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தப்படுமென நேற்று முன்தினம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு அரசாங்கமொன்றை அமைக்கும் வரையில் இடைக்கால அமைச்சரவையொன்றே தற்போது…
இலங்கையின் பணவீக்கம் ஜூன் மாதத்தில் மேலும் அதிகரிப்பு
இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணுக்கு அமைய ஜூன் மாதத்திற்கான முதன்மை பணவீக்கம் 58.9 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய,தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் முதன்மைப் பணவீக்கம், 2022…
நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் QR குறியீட்டைப் பெறுவதற்கு http://fuelpass.gov.lk என்ற இணையதளத்தில் மட்டுமே பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகமை (ICTA) பொதுமக்களுக்கு இன்று இந்த விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது அறிவிப்பை வெளியிடும் போது,…
இந்திய ஜனாதிபதியாக திரெளபதி முர்மூ தெரிவு, முதல் பழங்குடியினத்தவர்
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மூ வெற்றிப் பெற்றுள்ளார். இதன்மூலம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் அவர். திரெளபதி முர்மூ நாட்டின் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார். முன்னதாக மூன்றாம் சுற்று வாக்கு…
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு, சீனாவின் கடன்பொறியும், முட்டாள்தனமான பந்தயங்களுமே காரணம் – அமெரிக்க CIA குற்றச்சாட்டு
இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டை அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீஐஏயின் தலைவர் பில் பேர்னஸ் (William J. Burns) , கொலராடோ மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சுமத்தியுள்ளார்.…
புதிய அமைச்சரவை நாளை நியமிக்கப்படுகிறது
புதிய அமைச்சரவை நியமனம் நாளை -22- இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் இதனை, நினைவில் வைத்திருக்க வேண்டும் – சந்திரிக்கா
இலங்கையின் பெரும்பான்மையான பிரஜைகளின் ஆதரவுடன் இளம் செயற்பாட்டாளர்களின் அசாதாரணமான செயற்பாட்டினால் இந்த மாற்றம் சாத்தியமானது என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவில் கொள்வார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது முகநூல் பதிவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அப்…
ரணில் பதவியேற்பில் மஹிந்த, மைத்திரி, கிரியெல்ல ஆகியோர் பங்கேற்பு – ஒதுங்கியிருந்தவர்களும் கலந்து கொண்டனர்
இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக “ரணில் விக்கிரமசிங்க” பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் கலந்து கொண்டனர். அத்துடன்…
சர்வதேச ஊடகவியலாளரின் கேள்வியால் கோபமடைந்த ஜனாதிபதி, கடும் தொணியில் பதிலளிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்த போது சர்வதேச ஊடகவியலாளரிடம் கடும் தொணியில் பதிலளித்துள்ளார். விகாரைக்கான விஜயம் தனிப்பட்ட ரீதியாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த…