532 கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர், 75 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை
532 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…
532 கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர், 75 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை
532 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…
ரயில்வே திணைக்களத்துக்கு சொந்தமான லேக் ஹவுஸ் காணியை, மீண்டும் லேக் ஹவுஸுக்கே பெற்றுக் கொடுக்க நடவடிக்கை
லேக் ஹவுஸ் நிறுவனக் காணியை வெளிநாட்டுக் கம்பனிக்கோ அல்லது தனியாருக்கோ விற்பனை செய்வதற்கு எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அந்த நிறுவனத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். லேக்…
2 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிய 02 கப்பல்களுக்கு இதுவரை கட்டணம் செலுத்தப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த கப்பல்களில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு…
ஏராள சலுகைகளுடன் UAE இன் புதிய விசா நடைமுறை அமுல்
புதுப்பிக்கத்தக்க 5 ஆண்டு பசுமை குடியிருப்பு விசா உள்ளிட்ட பல வசதிகளை வழங்கும் ஐக்கிய அரபு அமிரகத்தின் புதிய விசா விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக எமிரேட்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் வெளிநாட்டினரை ஊக்குவிக்கும்…
பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றுவந்த மாணவரை காணவில்லை
பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல் போயுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த மாணவரே காணாமல் போயுள்ளார். பல்கலையின் விடுதியிலிருந்து நேற்றிரவு வெளியேறிய குறித்த…
ஜப்பானில் கடமையாற்ற 10 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு
ஜப்பானில் தாதியர்களாக கடமையாற்ற 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பினை வழங்க ஜப்பானிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று உத்தரவாதம் அளித்துள்ளது. ஜப்பானுக்கு சென்றுள்ள அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் குறித்த நிறுவனம் ஆயிரம் வேலைவாப்பிற்கான சான்றிதழை கையளித்து உத்தரவாதம் அளித்துள்ளது. அத்துடன் இந்த…
அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும்
அடுத்த வருடம் முதல் அனைத்து பாடசாலைகளிலும் முதலாம் ஆண்டு முதல் ஆங்கிலம் கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கையை, தரம் குறைப்பதற்கு உலக வங்கி யோசனை
இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற தரத்தில் இருந்து குறைந்த வருமானம் கொண்ட நாடாக தரம் குறைப்பதற்கு உலக வங்கி யோசனை முன்வைத்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியாவும் இந்த யோசனையை…
பல்கலைக்கழக அனுமதிக்காக 93,000 விண்ணப்பங்கள் – 45,000 மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்
இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக சுமார் 93,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் சுமார் 45,000 மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, மருத்துவ பீடத்திற்கு 2,035…