• Sun. Oct 12th, 2025

532 கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர், 75 இலட்சம் ரூபாய் பிணையில் விடுதலை

Byadmin

Oct 4, 2022

532 கோடி ரூபாய் வருமான வரியை செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸை 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரி. என். இலங்கசிங்க,  (03) கட்டளையிட்டார்.

குறித்த வரி ஏய்ப்பு தொடர்பில், பேர்பேச்சுவல் ட்ரெஷரீஸ் லிமிட்டட் நிறுவனத்துக் எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2021 ஆம் ஆண்டு வழக்குத் தாக்கல் செய்தது.

கடந்த 29ஆம் திகதி வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அலோசியஸ் நீதிமன்றத்தில் ஆஜராகாதாத நிலையில் இன்றையதினம் (03) மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்து நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்றையதினம் மன்றில் ஆஜராகியிருந்த அலோஸியஸுக்கு மேற்குறிப்பிட்ட பிணை வழங்கப்பட்டது.

இதேவேளை, 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறி ஏலத்தில் சுமார் 688 மில்லியன் ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டமைக்கு அர்ஜுன் மஹேந்திரன் பொறுப்பாக இருந்தார் என்றும் அவருக்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் அலோசியஸ் உள்ளிட்ட இவருக்கு எதிராக  வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இக்குற்றங்களைப் புரிவதற்கு அர்ஜுன மஹேந்திரனுடன் இணைந்து சதி செய்தார் என்று அவருடைய மருமகனான அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராகவும் உடந்தையான இருந்தார் என்ற குற்றச்சாட்டில் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனவுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *