இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கிய நாடுகள்
இலங்கை கோரிய நிதி உத்தரவாதத்தை பாரிஸ் கிளப்பிற்கு சொந்தமான கடனளிக்கும் நாடுகள் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதியைப் பெறுவதற்கு இலங்கைக்கு பொருத்தமான நிதி உத்தரவாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
துருக்கி செல்லும் 300 இராணுவ வீரர்கள்
துருக்கியில் நிவாரணப் பணிகளுக்காக 300 இலங்கை இராணுவ வீரர்கள் குழுவொன்று புறப்படத் தயாராக இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த…
இறுதி அறிக்கையின் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம்
முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தார். நெருக்கடிக்குப்…
ஆட்கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் கைது
ஆட்கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேகநபர் அம்பலாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாந்தோட்டை, நோனாகம, வெலிபதன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்று அவர்களை லாவோஸுக்கு அழைத்து சென்று விட்டுவிட்டு வருவதாக வெளிநாட்டு…
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் மேற்படி குறிப்பிட்டனர். காலநிலை…
துருக்கியில் மீட்புப் பணிகளுக்கு இலங்கையின் ஆதரவு
துருக்கியில் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்கள் தொடர்பான மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
நிலநடுக்கத்தில் 2,300 க்கும் அதிகமானோர் பலி
“1939ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரழிவு இதுவாகும்”, என்று துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்தார். இந்த நிலநடுக்கத்தில் 2,818 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் தேடல்…
கேஸ் விலை மீண்டும் அதிகரிப்பு
லாஃப் கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி லாஃப் சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராமின் புதிய விலை…
யாழில் கோர விபத்து – 19 வயது இளைஞன் பலி!
யாழ். தாவடி பகுதியில் நேற்று (05) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி…
நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு
சிலாபம் முகத்துவரத்திற்கு அருகில் நீராடச் சென்ற மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 35 வயதான தந்தை, 06 வயதான மகள் மற்றும் 07 வயதான உறவுக்கார சிறுவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவர்கள் சிலாபம் முகத்துவாரத்திற்கு அருகே நீராடச்…