எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலம் நீடிப்பு
எல்பிட்டிய உள்ளுராட்சி சபையின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
திமிங்கிலத்தின் வாந்தியுடன் பிடிபட்ட 2 பேர்
மிகவும் பெறுமதியான அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தியுடன் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை தெவிநுவர பிரதேசத்தில் வைத்து 08 கிலோ அம்பருடன் சந்தேகநபர்கள் குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு…
மொணராகலையில் சிறிய நிலநடுக்கம்
இன்று (21) காலை 9.06 மணியளவில் மொணராகலை பிரதேசத்தில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் 2.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதி செய்துள்ளது.
முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்
பொது மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுத்தால் உடன் அறித்தருமாறு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிரேஸ்ட அத்தியட்சகருக்கும் இடையில் வவுனியாவின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.…
சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான தகவல்
இலங்கையில் சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான நேர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, ஒரு மணித்தியால அவகாசம் இரண்டு மணித்தியாலமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையர் என்.எம்.ஒய். துஷாரி தெரிவித்துள்ளார். மேலும்,…
டெல்மா தேயிலையின் ஸதாபகர் காலமானார்
உலக புகழ்பெற்ற டெல்மா தேயிலை நிறுவனத்தின் ஸ்தாபகர் மெரில் ஜே.பெர்ணான்டோ தனது 93 ஆவது வயதில் காலமானார். இன்று அதிகாலை அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி…
திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கிய லிட்ரோ
இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் திறைசேரிக்கு ஈவுத் தொகையாக 1.5 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த தொகை திறைச்சேரிக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்றும் வீழ்ச்சி
நேற்றைய தினத்தை விட இன்று (ஜூலை 20) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 314.34 முதல் ரூ. 315.80…
மக்களிடையே நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரிப்பு
அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (19.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், தற்போது…