• Sun. Oct 12th, 2025

முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்

Byadmin

Jul 21, 2023


பொது மக்களின் முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுத்தால் உடன் அறித்தருமாறு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிரேஸ்ட அத்தியட்சகருக்கும் இடையில் வவுனியாவின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் சில பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுப்பதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அத்துடன் திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான அதாவது குறைந்த பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக எனக்கு அறியத்தரவும். எனது தொலைபேசி இலக்கமான 0718591340 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும்.

வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் பதில் அளிக்காத சந்தர்ப்பத்தில் குறித்த தொலைபேசிக்கு தன்னால் மீள தொடர்பு ஏற்படுத்தப்பட்டு முறைப்பாடு பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *