• Sun. Oct 12th, 2025

சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

Byadmin

Jul 21, 2023

இலங்கையில் சிறு குழந்தைகளுடன் பணிபுரியும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான நேர அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஒரு மணித்தியால அவகாசம் இரண்டு மணித்தியாலமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையர் என்.எம்.ஒய். துஷாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள தாய்ப்பால் வாரத்திற்கான சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்றுமுன்தினம் (19-07-2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே என்.எம்.ஒய். துஷாரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *