ஜெயா கொள்கலன் முனைய ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்
கொழும்பு துறைமுகத்தின் ஜெயா கொள்கலன் முனைய ஊழியர்கள், இன்று (22) காலை வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த மேம்பாடு காரணமாக, முனையத்தின் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், துறைமுக நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தொழிற்சங்க…
5 ரயில் சேவைகள் இரத்து
பராமரிப்பு பணிகள் காரணமாக, களனி பள்ளத்தாக்கு பாதையில் இன்று 5 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நுகேகொட – உடஹமுல்லவுக்கு இடையில் உள்ள பங்கிரிவத்த ரயில் கடவையில் பராமரிப்பு பணிகள் காரணமாகவே, இந்த ரயில் சேவைகள் இரத்து…
திடீரென பற்றி எரிந்த பேருந்து
உடமலுவ பொலிஸ் பிரிவில் உள்ள சேதவனாராமய அருகில் இன்று (22) அதிகாலை யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பேருந்து எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலிருந்து அநுராதபுரம் பிரதேசத்திற்கு வந்த யாத்ரீகர்கள் ஓய்வு விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளனர்.…
இன்றும் வெப்பமான வானிலை
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (22) வெப்பமான வானிலை எச்சரிக்கை மட்டத்தை விடவும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று வெப்பமான…
பீகாரில் வன்முறை: மாணவன் பலி
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தின் சசாரம் பகுதியில் இரு குழுக்களிடையே நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலின்போது மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த வன்முறையில் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பரீட்சை நிலையத்தில்…
ஜனாதிபதி – மாலைதீவு வெளியுறவு அமைச்சர் சந்திப்பு
பொருளாதார நெருக்கடியிலிருந்து மாலைதீவை மீட்டெடுக்க இலங்கையிடமிருந்து பாடம் கற்றுக்கொண்டிருப்பதாக மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை மாலைதீவு குடியரசின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று முன்தினம் சந்தித்த போதே…
தொழிலதிபர் சாமி காலமானார்
பிரபல தொழிலதிபரும் தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகருமான எஸ்.பி. சாமி தனது 89 ஆவது வயதில் காலமானார். வயது மூப்பின் காரணமாக நேற்று (19) இரவு அவர் காலமானார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வருடன் ஜீவன் சந்திப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (19 இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
சில மாவட்டங்களில் மழை
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வெப்பமான வானிலை நிலவுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா
டில்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்கிறார். டில்லியின் பா.ஜ.க. முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.…