மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்
2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான டிஜிட்டல் பதிவுகள் இருக்கும். ஒவ்வொரு மாணவருக்கும்…
சடலத்தை காண ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்றவர் மரணம்
ஆற்றில் மிதந்த சடலத்தை காண ஆற்றின் நடுப்பகுதிக்கு நீந்தி சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக வாரியபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாரியபொல ஆற்றில் அழுகிய நிலையில் மிதந்த சடலத்தையே அவர் பார்வையிட அவர் நீந்திச் சென்றமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.…
பிலியந்தலையில் பாரிய தீ பரவல்
பிலியந்தலை, போகுந்தர பகுதியில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு – பிலியந்தலை வீதியில் போகுந்தர பகுதியில் அமைந்துள்ள பலகை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெஹிவளை கல்கிஸ்ஸை நகரசபையின் தீயணைப்பு…
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே பல சந்தர்ப்பங்களில் மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…
புல்மோட்டையில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு
திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மீனவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிதம்பரம் கணித போட்டியில் சாதனை
அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான தரம் 04 மொஹமட் அஹ்சன் பாத்திமா சைமா மற்றும் தரம் 06 அப்துல் இர்ஷாத் மொஹமட் இல்ஹாம் ஆகிய இருவரும் வெற்றி பெற்று சாதனை…
ஜனாதிபதி நிதியம் வடக்கிற்கு
பிரதேச செயலகங்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகள் விரிவாக்கப்பட்டதன் மூலம், அதில் கோரப்படும் மருத்துவ உதவிக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், புதிய கணினி அடிப்படையிலான(Online System) குறித்து பிரதேச செயலகங்களின் உரிய விடயத்துடன் தொடர்புடைய ஊழியர்களுக்கு தெளிவூட்டுவதும் பயிற்சி அளிப்பதும்…
பக்கத்து வீட்டுக்காரர் மீது துப்பாக்கி சூடு: துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.…
மோசமான வானிலை காரணமாக 3,064 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 3,064 குடும்பங்களைச் சேர்ந்த 11,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கொவிட் -19 வைரஸின் தற்போதைய நிலை குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை
உலகம் முழுவதும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் தொடர்பான தற்போதைய நிலைமையை விளக்கி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, 2025…