திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து மீன்பிடிக்கச் சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மீனவர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான மீனவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.