அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற சிதம்பரம் கணித போட்டியில் கண்டக்குழி முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான தரம் 04 மொஹமட் அஹ்சன் பாத்திமா சைமா மற்றும் தரம் 06 அப்துல் இர்ஷாத் மொஹமட் இல்ஹாம் ஆகிய இருவரும் வெற்றி பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.பீ.எம் ஜெசின் தெரிவித்தார்.
மேலும் அவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருமண மண்டபத்தில் இடம்பெற உள்தாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.