• Sat. Oct 11th, 2025

தாருல் உலூம் அல் – மீஸானிய்யஹ் அரபுக் கல்லூரி – புதிய மாணவர்கள் அனுமதி 2018

Byadmin

Jul 21, 2018
தாருல் உலூம் அல் – மீஸானிய்யஹ் அரபுக் கல்லூரி
குருகொடை, அக்குரணை.
அல் குர்ஆன் மனனப் பகுதிக்கு புதிய மாணவர்கள் அனுமதி 2018
11-13 வயதிற்கிடைப்பட்ட அல் குர்ஆனை சரளமாக ஓதத் தெரிந்த மாணவர்கள் அல் குர்ஆன் மனனப் பிரிவின் தமிழ் மொழிப் பகுதிக்கும், ஆங்கில மொழிப் பகுதிக்கும் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
அல் குர்ஆனை மனனம் செய்யும் காலத்தில் பாடசாலைக் கல்வி பாடங்களும் நடாத்தப்படும்.
அல் குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் மாணவர்களுக்கு இங்கு ஷரீஆப் பகுதியில் பின்வரும் வசதிகளுடன் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கப்படும்.
வெளிநாட்டு அரபு இஸ்லாமிய பல்கலைக் கழகங்களுடன் கூட்டிணைக்கப்பட்ட பாடத்திட்டம்   பயிற்றப்பட்ட ஆசிரியர்களால் போதிக்கப்படும். திறமையானமாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப் பரிசில்கள் பெறுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன.
க.பொ.த (சாஃத, உஃத) பரீட்சைகளுக்கு மாணவர்கள் தயார்படுத்தப்படுவர்.
அல்-ஆலிம் மற்றும் தர்மச்சார்ய போன்ற பரீட்சைகளுக்கு தயார்படுத்தப்படுவர்.
அரபு, தமிழ், சிங்களம், ஆங்கிலம், உருது மற்றும் தகவல் தொழில்நுட்பம் (ஐவு) போன்ற பாடங்கள் தகுதி வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும்.
தரமானதும், ஆய்வுகளை மேற்கொள்ளுவதற்கு ஏற்றதுமான நூற்களை உள்வாங்கிய நூலகம் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
 (விண்ணப்பப்படிவங்களை நேரடியாகவோ, தபால் மூலமோ அல்லது கல்லூரியின் இணையத்தளமான றறற. அநநணயnலைலயா.உழஅ ல் இருந்து பதிவிறக்கம் (னுழறடெழயன) செய்வதன் மூலமோ பெற்றுக் கொள்ளலாம்.)
விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி பின்வரும் முகவரிக்கு 12-08-2018 திகதிக்கு முன் கிடைக்கக்கூடியவாறு அனுப்பி வைக்கவும்.
The Secretary,
Dhaarul Uloom Al – Meezaniyyah Arabic College,
Kurugoda, Akurana.
குறிப்பு : சுயமாக தயாரித்த விண்ணப்பப்படிவங்களையும் அனுப்பமுடியும்,  நேர்முகப்பரீட்சை:     12-08-2018 ஞயாயிற்றுக் கிழமை காலை 9:00 நடை பெறும்.
தொலைபேசி இல : 0761003436/ 0718386009/ 0812301506

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *